பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம் துவக்கம்

கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தின் மூலமாக புதிய கணக்கு துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக கொண்டுவந்துள்ள ஒரு திட்டம்தான் “சம்ரிதி யோஜனா திட்டம்”  எனவும் இந்த செல்வ மகள் திட்டத்தினை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்து கொண்டு வந்துள்ளது எனவும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இந்தியாவில் அதிக உறுப்பினர்கள் இல்லாமல் உள்ளது எனவும்,  இந்த செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,  உலக மகளிர் தினத்தினை முன்னிட்டும் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் பூஜா சங்க அரங்கில்,  அஞ்சலகத்தில் சேமிக்கபடும்,  செல்வ மகள் சேமிப்பு கணக்கினை, பெண் குழந்தைகளுக்காக துவங்கும் விழா நடைபெற்றது.

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு,  செல்வ மகள் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் 150 குழந்தைகளுக்கு புதிய கணக்கினை துவக்கி வைத்தார். முன்னதாக பேசிய வானதி சீனிவாசன் “இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில்,  தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அதிக பெண் குழந்தைகள் சேந்த்து உள்ளனர் எனவும்,  இந்த திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகள் பெயரில் சேமிக்கபடுகின்ற பணம், பெண்ணின் திருமண  வயதில் எந்த வித பிடித்த தொகையும் இல்லாமல்,  குழந்தைகள் செலுத்திய அனைத்து பணமும் வட்டி விகிதத்தில் அவர்களுக்கு திருப்பி தருகின்ற மிக சிறந்த சேமிப்பு கணக்காகும்,  இந்த கணக்கை  இன்றைய பெண்குழந்தைகள் அனைவரது பெயரிலும் தொடங்கி செமிக்க வேண்டும் என கூறினார்