கேபிஆர் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பெண்கள் தன்மேம்பாட்டு கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பொருளாதார குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அகிலா, பேராசிரியர் ஜானகி காவல்துறை ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தும் அதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் காவல் ஆய்வாளர் தனலட்சுமி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் விளக்கினார்.