ஊட்டியில் மலர் கண்காட்சி

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மே 15ல், மலர் கண்காட்சி துவங்குகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124வது மலர் கண்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தோட்டக்கலை துறை அலுவலகத்தில், நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு பின், மாநில தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன், கோடை சீசனை முன்னிட்டு, மே, 2 மற்றும் 3ம் தேதிகளில், கோத்தகிரி நேரு பூங்காவில், காய்கறி கண்காட்சி; ஊட்டி ரோஜா பூங்காவில், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில், ரோஜா கண்காட்சி நடைபெறும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 15 முதல், 19ம் தேதி வரை, மலர் கண்காட்சி; கூடலுாரில், 22, 23, 24ம் தேதிகளில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 29, 30, 31ம் தேதிகளில், பழ கண்காட்சி நடக்கிறது. சுற்றுலா பயணியர்களுக்காக, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

Source : Dinamalar