சர்வதேச பொறியியல் உற்பத்தி கண்காட்சியில் பங்கேற்ற கே.ஐ.டி மாணவர்கள்

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பயிலும் பல்வேறு துறைகள் சார்ந்த மாணவ, மாணவிகள் சர்வதேச பொறியியல் உற்பத்தி கண்காட்சி INTERNATIONAL ENGINEERING SOURCING SHOW (IESS) கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

இக்கண்காட்சியில் கே.ஐ.டி – மாணவ, மாணவிகள் பொறியியல் துறையின் தொழில் நுட்பத்தினை உபயோகப்படுத்தி நவீன ஆழ்துளை ஆய்வு கருவி, நீராவி மின் நிலையம் மூலம் மின்சாரம், நவீன உயிர்வாயு மூலம் மின்சாரம் கண்டுபிடிப்பு, ஜீவாமிர்தம் பில்டர் யூனிட் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு, மண்பானை மூலம் நீர்பாசனம், முடக்கு வாத நோயைக் குணப்படுத்தும் தானியங்கி உடற்பயிற்சி சிகிச்சைக்கான கருவி மிகவும் பாதுகாப்பானதாகவும், மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் வடிவமைத்துள்ளார்கள். மேலும் எங்களுக்கு வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்த கே.ஐ.டி.கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியின் கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம் என்று மாணவ மாணவிகள் கூறினார்கள்.