மாணவர்கள் வருங்காலங்களில் முன்மாதிரியாக திகழவேண்டும்

கோவை மண்டல கல்வியல் கல்லூரியின் இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம்

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 70 முதுகலை மாணவர்களுக்கும் 230 இளங்கலை மாணவர்களுக்கும்  பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரேமலதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல கல்வியல் கல்லூரியின் இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் கல்லூரியில் பயின்ற பாடத்திட்டங்கள் மற்றும் ஒழுக்கத்தையும் பேணி சமுதாயத்தில் நற்பெயர் மற்றும் வாழ்வில் முன்னேற்றமும் அடைய வேண்டும் என்றும் மாணவர்கள் இனி வரும் காலங்களில் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழவேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் 12 துறைகளில் 300 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.