வெற்றி வாகை சூடிய கேஐடி கல்லூரி மாணவர்கள்

“கோவை டைஸ் 2020” விளையாட்டுப் போட்டிகள் ஆர்விஎஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் இறுதி எரிபந்து ஆட்டத்தில் கேஐடி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி நேரு பொறியியல் கல்லூரியை 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. கோவை டைஸ் தலைவர் சக்தி மோகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.