மனப்பாடம் செய்து என்ன பயன்!

மாணவர்களிடம், குழந்தைகளிடமும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கேற்கும் ஒரே பொதுவான கேள்வி படிச்சிடியா? என்பது தான். அதே போல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்காத செயல் புத்தகத்தை எடுத்து படிப்பது. ஒரு சிலருக்கு புத்தகத்தை எடுத்தாலே காய்ச்சல் வந்துவிடுகிறது. காரணம் படிப்பு என்பது புத்தகத்தை முழுவதும் மனப்பாடம் செய்து அதை அப்படியே மறுபதிப்பு செய்வது போன்ற ஒரு முறையாக உள்ளது. இந்த எண்ணத்தை எப்படி இவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

முதலில் மற்ற வரலாற்று, இலக்கிய, கதை புத்தகத்தை போன்றுதான் நமது பாட புத்தகமும் (சில வேறுபாடுகள் இருக்கலாம்) என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பாட புத்தகமல்லாத மற்ற புத்தகத்தை எப்படி படிப்போம்?. ஒருமுறை வாசிப்போம். அப்படி இல்லையென்றால் மற்றொரு முறை படிப்போம். ஆனால் அதில் குறிப்பிடப்படும் கருத்து புரிந்து விடும், மனபாடமாகாது. இதைபோன்று தான் பாட புத்தகமும். ஆனால் இதனை நாம் வரிவரியாக படித்து அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் மனிதில் நிறுத்தி அதாவது மண்டையில் ஏத்தி வைத்து அதனை தேர்வின் போது எழுதுகிறோம். யாரால் அப்படி வரிவரியாக மனபாடம் செய்ய முடியும். இந்த மனபாடம் செய்யும் முறைதான் நாம் கற்கும் கல்வியின் வீழ்ச்சி.

பாட புத்தகத்தையும் மற்ற புத்தகத்தை போல படிக்க பழக வேண்டும். இதற்கு நாம் மற்ற புத்தகத்தை படித்து நம்மை தயார்படுத்திகொண்டால் என்ன பாட புத்தகமானாலும், எத்தனையானாலும் அதனை படிக்க முடியும். செய்தி தாளில் ஒரு செய்தி படிக்கிறோம். அதனை என்று யோசித்து பார்த்தாலும் நமது மனிதில் அதனை நினைவு படுத்த முடியும். காரணம் இதனை நாம் தெரிந்து கொள்வதற்காக படிக்கிறோம். மதிப்பெண் பெற அல்ல. இதனை பாட முறையிலும் செயல்படுத்த முடியும். எதையும் மதிப்பெண்காக படிக்காமல் எந்த புத்தகமானாலும் அதனை வாசியுங்கள். படிப்பது முக்கியமல்ல வாசிப்பது தான் முக்கியம்.

நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இன்று வரை நாம் பார்த்த அனைத்து தலைவர்களுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது என்பது உண்மை. அவர்கள் புத்தகத்தை மனபாடம் செய்யவில்லை அதனை தெரிந்து கொண்டனர், புரிந்துகொண்டனர். புத்தகம், நூல்கள் என்பவை ஆரம்ப காலத்தில் இருந்து பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது. சிலர் புத்தகத்தை படிப்பார்கள். எப்பொழுதென்றால் இரவில் உறங்கும் முன் படுகையில் படுத்து கொண்டு படிப்பார்கள். ஏனென்றால் அப்பொழுது தான் உறக்கம் வரும் என்று. புத்தகத்தை உறக்கத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் படிப்பது வீண். அதனை புரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள கருத்துகளை அறிந்துகொள்ளவேண்டும். மற்ற புத்தகமாக இருந்தாலும், பாட புத்தகமானாலும் நானும் படிப்பேன் என்று படிக்காமல், அதனை புரிந்து கொள்ளுங்கள். மனபாடம் செய்வதை விட அதனை தெரிந்து கொள்ளுங்கள்.