கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் சார்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை மில்லினியம் ரோட்ரி கிளப் இணைந்து நடத்திய லஷ்மி மில்ஸ் சந்திப்பு அருகில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா கல்லூரியின் கட்டிடவியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். Rtn. எம்.நடராஜன், தலைவர், கோவை மில்லினியம் ரோட்ரி கிளப், Rtn.டீ. ரவிசங்கர், யூத் சேர்மன், கோவை மில்லினியம் ரோட்ரி கிளப், Rtn.ஆர்.ஹென்றி அமலராஜ், மாவட்ட தலைவர் யூத் சர்வீஸ், சர்வதேச ரோட்ரி சங்கம்(3201) ஆகியோர் இவ்விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கிவைத்து சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய சாலைவிதிகள், குறைவான வேகம் மற்றும் நிறைவான பயணம் பற்றிய வாசகங்கள், பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவை துண்டுப்பிரசுரமாக வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமும், காரில் சீட் பெல்ட்டும் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பும், பேனாவும் கொடுத்து கௌரவித்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த சிலருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி ஹெல்மெட் அணிவதன் முக்கியதுவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் இருசக்கர வாகனம் இயக்கும் போதும், பின் இருக்கையில் பயணிக்கும் போதும் தலைகவசம் அணிவோம் என்றும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ரா.சரவணகுமார் இது குறித்து பேசுகையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்சேதம், உடல் பாதிப்பு மற்றும் பணவிரயம் போன்றவற்றால் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் பொருட்டு கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இதுபோன்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது என்றார்.