உடல் எடையை குறைக்க உதவும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய எண்ணெய் வகை ஆகும்; ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை விளக்கெண்ணெய் என்றும் கூறுவர். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்; ஆனால், நாம் இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை மட்டுமே போக்க உதவும் என்று அறிவோம். இந்த எண்ணெயை பற்றி நாம் அறியாத, மேலும் பல நன்மைகள், பயன்கள் உள்ளன.

ரிச்சினஸ் கம்யூனிஸ் எனும் அறிவியல் பெயர் கொண்ட ஆமணக்கு தாவரத்தின், ஆமணக்கு விதைகளில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது பல மருத்துவ பயன்பாடுகளுக்கும், தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கவும், ஷாம்பூக்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள் :

சருமத்தை வெண்மைப்படுத்துதல் :
ஆமணக்கு எண்ணெய் கொண்டு பல வழிகளில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்; 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இது வெண்மையான மற்றும் ஒளிரும் சருமம் பெற உதவும்.

முகப்பருவை போக்கும் :

முகத்தை நன்றாக கழுவிய பின், மிதமான சூடு கொண்ட வெந்நீரில் ஒரு சில துளிகள் விளக்கெண்ணெயை சேர்த்து, ஒரு சுத்தமான துணி கொண்டு இந்த எண்ணெய் மற்றும் நீர் கலந்த கலவையில் ஒற்றி எடுத்து, முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.
இதை இரவில் தூங்க செல்லும் முன் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் முகத்தை கழுவவும். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் இந்த விளக்கெண்ணெயை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

உதடுகள் :

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை போக்க, மற்ற எந்த ஒரு செயற்கை அழகு சாதன பொருட்களை காட்டிலும், அதிக நன்மையை அளிக்கக்கூடியது ஆமணக்கு எண்ணெய் ஆகும்.

ஆமணக்கு எண்ணெயை உதடுகளில் தேய்த்து, சற்று நேரம் நன்கு ஊற விடவும்; சிறிது நேரத்திற்கு பின், உதடுகளில் லிப் பால்ம் போன்றவற்றை தடவி கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வெடிப்புகளற்ற, விரிசல்களற்ற, அழகான உதடுகளை பெற முடியும்.

கருவளையங்கள் :

கண்களுக்கு அதிக வேலை அளிப்பதனால், சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உறக்கம் ஆகிய அடிப்படை தேவைகள் உடலுக்கு கிடைக்காததனால், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. இதனால் முக அழகு குன்றி காணப்படும்; இதை போக்க ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம்.

இரவு தூங்க செல்லும் முன், ஆமணக்கு எண்ணெயை கையில் எடுத்துக்கொண்டு, கண்களுக்கு கீழாக கருவளையங்கள் உள்ள இடத்தில் அரை நிமிடம், வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். காலையில் எழுந்து முகத்தை கழுவி விடவும்; இவ்வாறு தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் விரைவில் மறைந்துவிடும்.

வீக்கமடைந்த தோல் :

சருமத்தில் சொறி, சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அவற்றால் சருமம் வீங்கியிருந்தாலோ, சருமத்தில் சுளுக்கு ஏற்பட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ அவற்றின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால், இந்த எல்லா பிரச்சனைகளும் குணமாகும். விளக்கெண்ணெய் கொண்டு நீவி விடுவது சுளுக்கை விரைவில் குணப்படுத்த உதவும்.

ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

மலச்சிக்கல் :

ஆமணக்கு எண்ணெயால் ஏற்படக்கூடிய முக்கிய நன்மைகளுள் முதன்மையானது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதாகும். இந்த எண்ணெய் ஒரு தூண்டுதல் மலமிளக்கியாகும். ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொண்டால், அது மலக்குடலின் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்க உதவும்.

ஆனால், இந்த விளக்கெண்ணெயை அளவாக பயன்படுத்துவது அவசியம்; அளவுக்கு மீறி பயன்படுத்தினால், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். ஆகையால், முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொண்ட பின், ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துங்கள்.

கீல் வாதம்/ மூட்டு வலி/ முழங்கால் வலி :

ஆமணக்கு எண்ணெய் தொடக்க நிலை முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் பிரச்சனைகளை பயனுள்ள வழியில் குணப்படுத்த உதவும் என்று கூறுகிறது(9). ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் குறைபாடுள்ள நபர்கள், தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஆமணக்கு எண்ணெயை தினசரி பயன்படுத்தி வந்ததனால், நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

கீல் வாத நோய்க்குறைபாட்டில் இருந்து விடுபடுவது எளிதான காரியமே! தொடர்ந்து ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், சரியான பலன் கிடைக்கும்.

படர்தாமரை/ படை :

ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில், குறிப்பாக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டவை. சருமத்தில் மற்றும் உச்சந்தலையில், பூஞ்சை அல்லது கேண்டிடா தொற்றுகளால் உருவாகும் படை அல்லது படர்தாமரை போன்றவற்றை சரிப்படுத்த, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்து, தொற்று உள்ள இடங்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

ஆமணக்கு எண்ணெயால் வெளிப்புற உடல், சருமம், அழகு போன்ற விஷயங்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன; அதே போல் உட்புற உறுப்புகள், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஆமணக்கு எண்ணெய் உதவும்.

ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தைமஸ் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்; மேலும் விளக்கெண்ணெய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டி விடவும், நிணநீர் வடிகால் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

உடல் எடையை குறைக்கும் :

ஆமணக்கு எண்ணெயை 2 முதல் 3 தேக்கரண்டி உணவாக அல்லது உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடல் எடை ஒரு சில பவுண்டுகள் வரை குறைந்து வருவதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். உணவுடன் சேர்த்து உண்ண விருப்பமில்லாத நபர்கள் உணவுக்கு முன் அல்லது பின் 2 முதல் 3 தேக்கரண்டி விளக்கெண்ணெயை பழச்சாறு போன்ற பானங்களில் சேர்த்து பருகலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், இரண்டு வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை குறைய வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க ஆமணக்கு எண்ணெய் கொண்டு ஒத்தடம் போன்ற பேக் செய்தும் பயன்படுத்தலாம்; மேலும் ஆமணக்கு எண்ணெயை இஞ்சி, கிரீன் டீ போன்றவற்றுடன் கலந்து உடல் எடை குறைப்பு பானம் செய்தும் பருகலாம். இந்த முறைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.

சிறுநீரக கற்கள் :

ஆமணக்கு எண்ணெயில் பல சரும மற்றும் அழகு நன்மைகளை பயக்கும் பண்புகள் நிறைந்திருப்பதோடு, அதில் சில முக்கிய மருத்துவ நோய்க்குறைபாடுகளை சரி செய்யும் விஷயங்களும் நிறைந்துள்ளன. ஆமணக்கு எண்ணெய் பற்பல மருத்துவ நோய்க் குறைபாடுகளை போக்க வல்லது; குறிப்பாக, சிறுநீரக கற்களை உடைத்து கரைக்கும் வலிமை கொண்டது.

சிறுநீரக கற்கள் பிரச்சனை கொண்ட ஒரு நபரை படுக்க வைத்து, அவரின் வயிற்றின் மேல் பகுதியில் இருந்து, தொடை வரை, ஆமணக்கு எண்ணெயில் நன்கு ஊறவைக்கப்பட்ட ஒரு மிருதுவான துணியை விரித்து வைக்கவும். இதன் மேல் இன்ஃப்ரா ரெட் என்று சொல்லக்கூடிய அகச்சிவப்பு விளக்கின் ஒளியை படுமாறு வைத்துவிட்டு, சில மணி நேரங்கள் கழிந்த பின் சோதித்து பார்த்தால், சிறுநீரக கற்கள் பெருமளவு உடைந்து, கரைந்து, மறைந்து போயிருப்பதை அறியலாம். இது தவிர சிறுநீரக கற்களை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெயை வேறு பல வழிகளிலும் கூட பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.