இமையம் வரை அதிரும் ஹிலாரிக்காஸ்-2020 தொடங்கியது

இந்துஸ்தான் கலை கல்லூரியின் மாபெரும் விழாவான ஹிலாரிக்காஸ்-2020 கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்னிந்திய அளவில் 150 கல்லூரிகளில் இருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். குழு நடனம், தனி நபர் நடனம், பாட்டுக்கு பாட்டு, வினாடி வினா முக அலங்காரம், கோலப்போட்டி, புகைப்பட போட்டி என 16 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.


20 ஆவது ஆண்டு ஹிலாரிக்காஸ்-2020 கலை நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும், இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் கண்ணையன், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதிஷ்பிரபு, அறங்காவலர் யமுனா சக்திவேல், கல்லூரி முதல்வர் பொண்ணு சாமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என மொத்த அரங்கமும் நிறைந்து ஆனந்தத்தின் உச்சி வரை சென்று மெய் சிலிர்க்க வைக்கிறது.