பிஷப் ஆம்புரோஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

விளையாட்டு ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும், ஒழுக்கத்துடனும் வாழ உதவும் ஒரு கருவி. நாம் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு வாழ்வியல் ஒழுக்க நெறி முறை இருக்கும். இந்த விளையாட்டு மேம்பட்டால், தனித்திறமையும், தலைமை பண்பும் அதிகரிக்கும். இதனை மாணவர்களிடையே மேம்படுத்த ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பிஷப் ஆம்புரோஸ் கல்லூரியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

9 விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியின் அனைத்துத் துறை மாணவ, மாணவிகளும் அணிவகுத்து அவரவர் துறையின் பலத்தை வெளிப்படுத்தினர். இவ்விழாவை கல்லூரி செயலர் அருட்தந்தை R.D.E. ஜெரோம் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அ.பீட்டர் ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் கோயம்புத்தூர் முன்னாள் சிறைத் துறை அதிகாரி கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விளையாட்டு விழா நிகழ்ச்சிகளை முழுவதுமாக விளையாட்டு துறையின் தலைவர் வேணுகோபால் அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார்.