அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்திப்பு

14 வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2029.22 கோடி செயலாக்க மானியத் தொகை மற்றும் 4345.47 கோடி அடிப்படை மானியத் தொகையை விடுவிக்க கோரிய தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினார். உடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இயக்குநர் பழனிசாமி ஆகியோர் உள்ளனர்.