வயதாவதை எதிர்த்து போராடும் ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் என்ற பெயர் புதிதான விஷயம் போன்று ஒலித்தாலும், இந்த எண்ணெயை பழங்காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; பழங்கால மக்கள் ஆலிவ் எண்ணெயை ‘திரவ தங்கம்’ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் Olive oil என்று அழைக்கப்படும், ஆலிவ் எண்ணெயை தமிழில் இடலை எண்ணெய் என்று வழங்குவர்; இடலை எண்ணெய் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இடலை எண்ணெயை சங்க காலத்தில் இருந்தே மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால், இந்த எண்ணெயை சருமத்திற்கு, தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் பல நன்மைகளை தருகிறது.

 முகப்பரு/ பருக்கள்

முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் போன்றவை மறைய ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவும்; ஆலிவ் எண்ணெய் கொண்டு தினமும் இரவில், முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன்களை பார்க்க முடியும்.

ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, மேம்படுத்த உதவும். இந்த வைட்டமின்கள் முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக போக்க உதவும்.

 தோலை ஒளிரச்செய்யும்
ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ சத்து, தோலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை மிளிரச் செய்யும். ஆலிவ் ஆயிலை தினமும் சருமத்தில் தடவி, மசாஜ் செய்து வந்தால், சருமம் பொலிவான, மிளிரும் தோற்றத்தை பெறுவதை காணலாம்.

இவ்வாறு சருமத்தை மிளிரச் செய்து, வயதாவதை தடுத்து, இளமை தோற்றத்தை பெற முக்கிய உதவி புரிவது, ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஸ்குவாலின் அமிலம் ஆகும்.

வயதாவதை எதிர்த்து போராடும்/ சுருக்கங்கள்

சருமத்தை ஈரப்படுத்தும்

கடைகளில் எளிதாக, மலிவான விலையில் கிடைக்கக்கூடியது விர்ஜின் ஆலிவ் எண்ணெய். இது போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தை கையாளும் பொழுது, இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைவு மற்றும் பணத்தை விரையமாகாமல் தடுப்பதுடன், ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம்.