நாராயண குரு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

கோவை  க .க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 08/02/2020 சனிக்கிழமையன்று மாபெரும் வேலை வாய்ய்பு முகாம் நடைபெற்றது . இதில் 35-க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் , பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவை பங்கு பெற்றன . இதில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவை நடைபெற்றன . 1,200-க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் ( UG ,  PG , DIP) கலந்து கொண்டார்கள் இதில் 900 பட்டதாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் சேர்வதற்க்காக உறுதிக்கடிதத்தை ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் P.M வாசு அவர்களும் , கல்லூரி முதல்வர் M.இளங்கோவன் அவர்களும் வழங்கினார்கள்.