இந்துஸ்தான் கல்லூரி மாணவனுக்கு பாராட்டு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு  தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த இரண்டாம் ஆண்டு கணிதத்துறையைச் சேர்ந்த என்.சி.சி. மாணவருக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், என்.சி.சி. துவங்கி 2 வருடத்தில் இவர் சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிவகுப்பில் பங்கேற்பதற்கு 12 என்.சி.சி. கேம்ப்களில் பங்கேற்று இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகவே அந்த மாணவனை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு பாராட்டுவிழா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதில் கோவை 6டிஎன் மெடிக்கல் கம்பனியின் கமாண்டிங் ஆபீஸர் மேஜர் தினேஷ்டேவிஸ் கலந்து கொண்டு இம்மாணவனுக்கு விருதினை வழங்கி அம்மாணவனின் பெற்றோரையும் கவுரவப்படுத்தினார்.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு, மற்றும் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.