ஆசியா அழகி போட்டியில் நேரு கல்லூரி மாணவி

கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கோவை நேரு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (வியாபார நிர்வாகம்) பி.பி.ஏ. பயிலும் மாணவி ரித்திகா சுகீஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர் சமீபத்தில் டெல்லியில், குளோபல் இந்தியா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், டெல்லி நிறுவனம் சார்பில் நடைபெற்ற “மிஸ் ஆசியா 2020” போட்டியில் கலந்து கொண்டு முதலாம் ரன்னராக தேர்வு பெற்றார்.

இந்த மிஸ் ஆசியா போட்டியில் அகில இந்திய அளவில் 3000 பேர் பங்கேற்றனர். இதில்  இறுதிச் சுற்றுக்கு 300 பேர் தேர்வு பெற்று பின் டாப்டென்க்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இவருக்கு மைக் பெற்று மேடையில் சுய அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இந்த 10 பேரில் வெற்றி வாய்ப்புக்கு 3  பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலாவது ரன்னர் அப் – பாகத் தேர்வு செய்யப்பட்டார் ரித்திகா சுகீஜா. இவருக்கு டெல்லியில் மேம்பாட்டுத் தகுதிப் பயிற்சிக் களத்தில் தேசியப் புகழ் பெற்ற ரேம்ப் வாக் டிரெய்னர் மற்றும் போஸ்சர் டிரெய்னர், பிரபல வல்லுனர்; ஆங்கிட் நாஜ்பால், பேஃஷன் வீக்ஸ், மேலாண்மை இயக்குனர் லிஸா வர்மா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் நேரு கலை அறிவியல் கல்லூரியின் பிபிஏ துறைத் தலைவர் டாக்டர். என்.ஷேனி வரவேற்றார்.

முதல்வர் டாக்டர்.பி.அனிருதன் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சில சமயங்களில் இரண்டாவது, மூன்றாவது ரன்னர் அப்கள் கூட அடுத்ததாக நடைபெறும் போட்டிகளில் மிஸ். யுனிவர்சாக வென்றுள்ளார்கள். அது போல தற்போது மிஸ் ஆசியா போட்டியில் முதலாம் ரன்னராக தேர்வு பெற்றுள்ள நமது மாணவி ரத்திகா சுகீஜா இனி வரும் காலங்களில் ஆசியா பசுபிக், மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் வெல்லுவார். உங்கள் ஆர்வங்களை உணர்ந்து சாதனை புரிய முன் வரும் மாணவர்களை நேரு கல்வி குழுமம் முழு மூச்சாக ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது நமது நேரு கல்வி குழுமம் ரித்திகா சுகீஜாவை மிஸ்.யுனிவர்ஸ் போட்டிக்கு பங்கேற்க தயார் படுத்துவதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கும். 2020 எனும் இந்த ஆண்டு நமக்கு பெருமையான துவக்கம். எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தினால் சாதனை புரியலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாணவி ரித்திகா சுகீஜா பேசும் போது :- இந்த மிஸ். ஆசியா போட்டியில் முதலாம் ரன்னராக வந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பக்கபலத்தோடு என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது. நீங்களும் உங்கள் ஆர்வங்களை, பலமாக நம்புங்கள், உழையுங்கள். வெற்றி நிச்சயம். நான் கலந்து கொண்ட இந்த போட்டியில் டாப் 30, பின் டாப் 10 என பல கட்டங்களாக முன்னேறி பின் டாப் 3 இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த சாதனையை அடைந்தேன். மகிழ்வுடன் தன் நன்றிப்பெருக்கை இனிதே தன் பேராசியர்களுக்கும் தன் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.