மான்செஸ்டர் சர்வதேசப்பள்ளியில் விளையாட்டு விழா

மான்செஸ்டர் சர்வதேசப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றிய கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் டாக்டர் பாலாஜி சரவணன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் இன்றைய காலத்தில் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், குழந்தைகள் குற்றவாளிகள் வலையில் எப்படி விழுகிறார்கள் மற்றும் இந்த ஆபத்தில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள் குறித்தும், பெற்றோர்கள் குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதன் அவசியத்தைப்பற்றியும் பேசினார். மேலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் மொபைல் போன் பயன்பாட்டினால் சந்திக்கும் பிரச்சினைகளை தற்போது நடக்கும் குற்றங்களை உதாரணமாக காட்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைல் போன் பயன்பாட்டை கண்காணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய அவரின் பேச்சை ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் ரசித்து கேட்டனர்.

மேலும் அகில இந்திய அளவில் விளையாட்டு மற்றும் இதர திறன்போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கினார். பள்ளியின் தலைவர் டாக்டர் பி.எஸ்.மூர்த்தி மற்றும் தாளாளர் பிரியா மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினரை கௌரவித்தனர்