இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “காவலன்  செயலி”விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

கோவை அவிநாசி ரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்     பி .சி .ஏ .துறை சார்பாக “காவலன் செயலி” விழிப்புணரவு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் 03.02.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது .

இக்கருத்தரங்கில் கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா ஐபிஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இக்கருத்தரங்ககினை துவக்கி வைத்து பேசுகையில் “தருபோது உள்ள அதிகமான செயலிகளில் தவறுதலான செயலிகளையயே மாணவரகள் அதிக  கவனம் செலுத்துகின்றனர் .உங்களுடைய சமத்தியாம் ,புத்திசாலித்தனம் பொறுத்தே உங்களின் எதிர்காலம் அமையம் .தனிமனிதனின்  வளரிசியைக் காட்டிலும் அறிவியலின் வளரச்சி அபரிமிதமானது .ஏந்த மீடியாவிலும் தகவல்களை எடுத்துக் கொள்கென்றனர் .தினமும் செய்தித்தாள்களை அரைமணி நேரமாவது படியுங்கள் .அப்போதுதான் நமக்கு படிக்கும் திறன் மற்றும் ஆர்வம் ,நினைவாற்றல் வளரும் .எந்த சூழ்நிலையிலும் பெற்றோர்களை ஏமாற்றாதீர்கள், தற்போது புத்தகங்களின் வழியாக கிடைக்கும் நல்ல செய்திகளை விட மாணவர்களாகிய உங்கள் கையில் இருக்கும் ஆன்ராய்டு போனின் மூலம் கிடைக்குப் பெறும் தவறான தகல்களே அதிகம் .நம் ஓவ்வொருவருக்கும் நிறைய குணங்கள் இருக்கிறது .அந்த குணங்களை அந்தந்த இடங்களில் காட்ட வேண்டும் . நாம் நம் தேசத்தை வளர்ப்பதில் அதிகமாக கவனம்    செலுத்தவில்லை என்றே நான் கூ றுவேன் .நுமக்கு அனைவருக்கும் அனுபவ ரீதியான அறிவு இருந்தால் மட்டுமே நமது திறமை வெளியில் வரும் . நாம் வரலாற்றினை சரியான முறையில் படித்திருக்க வேண்டும் , நாம் நமது வாழ்வில் ஓவ்வொருநாளும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். ஆகவே உங்களுடைய முயற்சியே உங்களுக்கு பயன்  தரும். இச்சமுதாயத்தில் பெண்கள் நம்முடைய கலாச்சாரம், சுற்றுப்புறம், மனிதர்களை நன்கு கற்றறிதறில் போண்றவைரை புரிந்துகொண்டு நடந்தாலே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடமுடியும்.

பெண்களுக்கு எத்தனையோ பாதுகாப்பு விழிப்புணர்வு இருந்தாலும் இந்த காவலன் செயலி மூலம் அணைத்து பெண்களுக்கு பாதுகாப்பு உடனடியாக கிடைக்கும். இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இல்லத்தரசிகள் வயது முதிந்தோர் அனைவரும் இச்செயலின் மூலம் பயன் பெறலாம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இச்செயலியை பயன்படுத்திய அடுத்த ஐந்து நிமிடத்தில் நிகழ் இருக்கும் இடத்தில் வந்து காவலர்கள் காப்பாற்றுவார்கள். உங்களுடைய பெற்றோர்கள் ஓரளவுக்கு மேல் உங்களை கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய தகவல்களை அனைவரிடமும் பகிராதீர்கள். பெண்கள் ஒரு பொக்கிசம் அவர்கள் மனநிலையை புரிந்துகொண்டு சந்தோசமாக அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்

மேலும், இவ்விழாவில் கோவை மாநகர கிழக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர். கோவை மாநகர கிழக்கு குற்ற பிரிவு உதவி ஆணையர் பாஸ்கர் மற்றும் கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்விநிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரியா சதீஸ்பிரபு, டிரஸ்டி யமுணாசக்திவேல், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பிசியே துறை தலைவி செந்தில்வடிவு, துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.