வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஆய்வு

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் ஜோதிமணி, நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கோவை மாநகராட்சி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் செயல்பட்டுவரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் உணவுக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்படுவதையும், உரத்தின் தரம் குறித்தும்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்தஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னாராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.