பசுமை வேதியலின் முன்னேற்றங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வேதியல் துறை  பசுமை வேதியலின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ரமேஷ் பாபு தலைமை விஞ்ஞானி சி.எஸ்.ஐ.ஆர் சிக்ரி, காரைக்குடி மற்றும் சண்முக ராஜ் உதவி பேராசிரியர் ஐ.ஐ.டி பாலக்காடு, கேரளா ஆகியோர் கலந்துகொண்டு பசுமை வேதியல் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்வு  மாணவர்களின் பசுமை வேதியியல் குறித்த ஐயப்பாடுகளை தெளிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது.  இதில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் கருத்தரங்கம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.