கே.ஐ.டியில் ரஷியன் கல்ச்சர் ஃபெஸ்டிவெல்

கோவை, கண்ணம்பாளையத்தில் KIT-கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இண்டோ ரஷியன் சேம்பர் ஆப் கமெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் (IRCCI) இணைந்து நடத்தும்   “ரஷியன் கல்ச்சர் ஃபெஸ்டிவெல் 2020”  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற ரஷ்யாவின் உள்ள 14 நடனக் கலைஞர்கள் தங்கள் தனித்துவமான 21 நடனத் திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்காக நடன கலைஞர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து இருந்தனர். அவர்களின் இக்கலை நிகழ்ச்சிகள் காண்போரை கவர்ந்தது மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர். இவ்விழாவில் தங்கப்பன், பொது-செயலர் – இண்டோ ரஷியன் சேம்பர் ஆப் கமெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் (IRCCI), ஜெயந்தி வெங்கட்ராமன் – நிர்வாக அதிகாரி, இண்டோ ரஷியன் சேம்பர் ஆப் கமெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் (IRCCI), கேஐடி கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன்,  கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், நடன பயிற்சியாளராக – மரியா ட்ரோபிமோவா – டைமண்ட் குரூப், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.