சமூக வலைதளங்களின் மூலமே சமூக குற்றங்கள் நடைபெறுகிறது

டாக்டர் என்.ஜி.பி.கலை கல்லூரியில் வழக்கறிஞர் சி.எஸ். கலைவாணி

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் புகார் அமைப்பின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சி.எஸ். கலைவாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினார். பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமே பல்வேறு சமூக குற்றங்கள் நடைபெறுகின்றது என்றும் கூறினார். தகவல்களை திருடும் சைபர் குற்றவாளிகள் மூலமாக பலவிதங்களில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான சட்ட விதிகள் குறித்தும் தண்டனைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பாலியல் துன்புறுத்தல் புகார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் ஆர்.கௌசல்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினருக்கு தமிழ்த்துறை பேராசிரியர் கு.செல்வி சிறப்புச் செய்தார். வணிகம் மற்றும் தொழில்முறைக் கணக்கீட்டியல் துறைத் தலைவர் வனஜா நன்றியுரை வழங்கினார்.