கே.பி. ராமசாமிக்கு பாராட்டு விழா

கே பி ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமிக்கு அண்மையில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
இதற்காக பாராட்டு தெரிவிக்கும் விதமாக கேபிஆர் பொறியியல் கல்லூரியில் கே.பி ராமசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஜி.ஆர்.ஜி நிறுவனத்தின் நிறுவன அறங்காவலர் நந்தினி ரங்கசாமி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலா, முதன்மை நிர்வாக அதிகாரி ஏ. எம். நடராஜன், கலை கல்லூரி முதல்வர் பாலுசாமி மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.