சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் தொடக்கம் !

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணைப்படி பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, இயற்பியல், கணிதம், கணக்குப் பதிவியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும்.10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். அதேபோல், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source : தினகரன்