கோவை கொங்கு நண்பர்கள் சங்க முதலாம் ஆண்டு குடும்ப விழா

கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு குடும்ப விழா இந்துஸ்தான் கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கே. எம். சி. எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, ரூட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி, ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன், நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம், இந்துஸ்தான் நிறுவனங்களின் தலைவர் கண்ணையன், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் போன்ற கோவையின் முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மேலும் இவ்விழாவில் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பெருஞ்சலங்கை போன்ற பலர் அறியாத கலை நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றன. இது போக காளைகள், சேவல்கள், ஆடு, குதிரை போன்றவைகள் கண்காட்சிகாக வைக்கப்பட்டிருந்தன.