இசை சாரலில் ஊ லா லா நிகழ்ச்சி

நீல்கிரி பயோஸ்பியர் நேச்சர் பார்க் (NBNP) நிதி திரட்டும் நிகழ்வாக ஊ லா லா! என்ற இசை நிகழ்ச்சி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பிரபல பின்னணி பாடகர்களான ஹரிச்சரன், ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோரின் இசை மாலை பொழுதில் மயக்கும் ஓசையாக அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தொகுத்து வழங்கினார். மேலும் இதில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகின் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் 8000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மாலை பொழுதினை பொன் மாலை பொழுதாக கண்டு, கேட்டு மகிழ்ந்தனர்.