கோவையில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு

இஸ்ரேல் நகரங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுத்தபடும் தொழில்நுட்ப நுணுக்கங்களை இந்தியாவிற்கு கொண்டு வர கோவையில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கோவையில் ‘நிலையான நகரங்கள்’ இந்தியா இஸ்ரேல் கூட்டு  பன்னாட்டு கருத்தரங்கு வருகின்ற ஜனவரி 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகங்களில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் இஸ்ரேலில் உள்ள இரண்டு நிறுவனங்களை சேர்ந்த 15 இஸ்ரேல் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இரண்டு நாள் கருத்தரங்கில் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தியா இஸ்ரேல் கல்வி நிறுவனங்களில் நிலையான நகரங்கள் குறித்த ஆய்வினை மேம்படுத்துதல் இஸ்ரேலின் நகரங்களை தூய்மையானதாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் சிறந்த தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட  ஆராய்ச்சி வாய்ப்புகளை இந்திய பங்குதாரர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கமாகும்.