மாநில அளவிலான தொழில்நுட்ப விழா

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இத்தொழில்நுட்ப விழா ‘யுனிஃபெஸ்ட் 2020’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் 113 கல்லூரிகளிலிருந்து 850 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். இவர்களுக்கு டி பக்கிங், கணினி குறித்த பேச்சு போட்டி, பேப்பர் பிரசன்டேசன், வினாடி வினா, நடனபோட்டி, உண்மை நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒட்டுமொத்த அதிகம் புள்ளி பெரும் கல்லுரி அணிக்கு சான்றிதழ்களும், கேடையங்களும் வழங்கப்பட்டது. கணினிகள் குறித்தும், பயன்பாடு வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத்தொழில்நுட்ப விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் கலந்துக்கொண்டு பேசுகையில், “கணினி துரையின் வளர்ச்சி மிகவும் அபிரிவிதமானது. மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே நிறைய பயன்னுள்ள விஷயங்களை செய்யவேண்டும். இல்லையென்றால் பிற நாட்களில் மிகவும் கஷ்டப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தற்போதுள்ள புதிய தகவல்களை உடனுக்குடனே கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் போட்டி நிறைந்த உலகம். இப்படிப்பட்ட போட்டிகள் நிறைந்த உலகில் நீங்கள் படித்துக்கொண்டிருப்பதே வாழ்வில் ஜெயித்து என்று அர்த்தம்” என்று கூறினார்.

மேலும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரியாசதீஸ்பிரபு, ட்ரஸ்டி சக்திவேல், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கணினித்துறை தலைவர் ரங்கராஜ், கணினி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.