ஜனவரி 26ல் பாரத் உற்சவ் ‘2020’ திருவிழா

பாரத் கலா சங்கமம் என்பது கோவையில் உள்ள அனைத்து மாநில கலாச்சார அமைப்புகளையும் ஒற்றை கூரையின் கீழ் கொண்டு வரும் அமைப்பு.  இது பாரத தேசத்தின் அனைத்து கலாச்சாரங்களையும் ஒருங்கிணைத்து ஒரே குரலாக ஒலிக்க வைக்கும் ஒரு முயற்சி. இதன் வழியாக நம் ஒவ்வொருவருக்கும் பிற மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரங்கள், வாழ்க்கை முறை, மொழி, உணவு, பழக்க வழக்கம்  போன்றவற்றைக் குறித்த ஆழமான அறிவினைப் பெற முடியும்.

இந்த அமைப்பு, பல்வேறு கலாச்சார நுணுக்கங்களை ரசிப்பதற்கும், மகிழ்வதற்கும் நமக்கு வழிவகுக்கும். அதே வேளையில் நம் அனைத்து கலாச்சாரங்களின் அடிநாதமாக விளங்கக்கூடிய  அடிப்படைகளைக் கொண்டாடவும் செய்யும். நம் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கின்ற புள்ளியாக, நம்மை நெடுங்காலம் இணைத்து வைக்க இருக்கிற புள்ளியாக இந்த அமைப்பு  விளங்கும்.

பாரத் கலா சங்கமம் என்பது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன் தலைமையில்  துவங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இந்தியாவின் அனைத்து கலைகளையும் பாராட்டி, அனைத்து கலாச்சாரங்கள் மீதும் அன்பு செலுத்தி நல்லெண்ணத்தை வளர்ப்பது,  அனைத்து சமூகங்களிடையேயும் நல்ல சமூக தொடர்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது போன்றவைகளால்  கலாச்சார ரீதியாக ஒன்றுபட்ட இந்தியாவினை உருவாக்க முடியும் என்பது பாரத் கலா சங்கமத்தின் முதன்மையான நோக்கம்.

 

இதன் அடிப்படையில் இக்கழகத்தின் முதல் பண்பாட்டு கலாச்சார நிகழ்வாக  “பாரத் உத்சவ் 2020  திருவிழா” குடியரசு தினமான வரும் 26 ஜனவரி 2020 அன்று 6.30 மணியளவில் ஆர்.எஸ்.புரம் கிக்கானி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெறவுள்ளது. பாரத் உத்சவ் என்பது பாரத் கலா சங்கமத்தின் ஒரு கலாச்சார திருவிழா. அந்நாளில்  கோவையின் ஒவ்வொரு கலாச்சார சங்கமும் அவர்களின் மாநில விழாவினை அன்று மேடையில் நிகழ்த்திக் காட்டுவார்கள். 2020 ஆண்டின் கருத்துருவாக்கமாக  “இந்திய திருவிழாக்கள் “ எனும் தலைப்பில் அமைகிறது இத்திருவிழா. இந்த பாரத் உத்சவ் 2020”  தலைவராக  டாக்டர். பி. சுரேஷ் பிரபு பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெட் ஜெனரல் பிஎம்.ஹரிஷ் பங்கேற்கின்றார்.

 

பாரத் கலா சங்கமத்தின்  தற்போதைய உறுப்பினர்களாக

தி பெங்காலி அசோசியேஷன்,

கோயமுத்தூர் சம்யுக்தா கெளடா சரச்வதா சபா ஜிஎஸ்பி ( கொங்கனி) சமாஜ்,

தி கோயமுத்தூர் சிந்தி பஞ்சாயத் அசோசியேஷன்,

ப்ராண்டியர் ஆப் கோயமுத்தூர் ரீஜியன் மலையாளி  அசோசியேஷன்,

குருத்வாரா சிங் சபா,

கைரளி கல்சுரல் அசோஷியேசன்,

அகர்வால் சமாஜ், கோவை,

தி கேரளா க்ளப்,

கேரளா கல்சுரல் சென்டர் ( பதிவு),

தி கர்னாடகா அசோஷியேசன்,

மஹேஸ்வரி சபா,

பஞ்சாபி அசோசியேஷன் ( பதிவு),

ராஜஸ்தானி சங்கம்,

சிகர்பூர் சிந்த் பேங்கர்ஸ் அசோசியேஷன்,

சிந்தி ஃபோரம்,

வேர்ல்ட் தெலுங்கு பெடரேஷன் கோயமுத்துர் சாப்டர்,

கோவை மலையாளி சமாஜம்

ஆகியவை உள்ளன.

பாரத் கலா சங்கமத்தின்  செயல்பாடுகள் என்பது, அவ்வப்போது கலாச்சார சந்திப்புகளை நிகழ்த்துவது, அப்போது பொறுப்பேற்று கொண்ட சங்கம் அவர்களின் கலாச்சார நிகழ்வுகளை கலையாக, நாடகமாக, இசையாக, நடனமாக, கைவினையாக, உணவின் ஊடாக, மற்றும் வாழ்க்கை முறையின் மூலமாக வெளிப்படுத்துவார்கள்.

இந்த கலாச்சார கூடுகைகள் வழியாக இச்சங்கத்தின் உறுப்பினர்களை, அவர்களின் குடும்பத்தை ஒன்று கூடச்செய்யும். இதன் மூலம் அனைத்து மக்களும் பல்வேறு கலையை, கலாச்சார நிகழ்வுகளை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இது அமையும்.