ஜி ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ராமசாமி நாயுடு மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள்,  ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள்   இணைந்து பள்ளி வளாகத்த்தில் சமத்துவ பொங்கல் வைத்து ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இவ்விழாவில் பள்ளித்  தாளாளர் ஷீலா கார்த்திகேயன் மற்றும்  பவர்ணா கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர். மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சமூக வேறுபாடுகளை கலைந்து மாணவர்கள் அனைவரும் தமிழர் திருநாளை பாரம்பரியம் மாறாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் தமிழர் பண்பாட்டை விளக்கும் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவற்றை மாணவர்கள் மிக சிறப்பாக ஆடி, பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். விழாவின் சிறப்பம்சமாக பாரம்பரிய உணவு திருவிழாவும் இருந்தது. இதில் மாணவர்கள் தயாரித்த உணவுகளை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இவ்விழாவினை பள்ளியின் துணை முதல்வர் ரம்யா மற்றும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர் .