குமரகுரு கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 71 – வது சுதந்திர தின விழா 15.08.2017 இன்று கொண்டாடப்பட்டது. சங்கர் வானவராயர், இணை தாளாளர், தேசிய கொடியை ஏற்றினார். அவர் நாட்டின் தலைவர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் வணங்கி கௌரவித்தார். மேலும் அவர் வருங்கால இளைஞர்களை ஒற்றுமையுடன், சமூக பொறுப்புடன், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்புடன்  அகம் கிளப் மாணவர்கள் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.