ஃபிம்ஸ் மருத்துவமனையில் துண்டான காலை மீண்டும் இணைத்து நடக்க செய்து சாதனை

கோவை, ஃபிம்ஸ் மருத்துவமனையில் துண்டான நிலையில் வந்த காலை மீண்டும் இணைத்து  நடக்க செய்து ஃபிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சையை சிறப்பாக செய்துள்ளது.

இதுகுறித்து ஃபிம்ஸ் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் கூறியதாவது சென்னையில் பல பிரபலமான மருத்துவமனைகளுக்கு கன்சல்டன்டாக இருக்கும் ஹாஸ்கான்ஸ் கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ் செயல்படும் ஃபிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு தரமான சிகிச்சையை அளித்து வருகின்றது.

கேரளாவிலிருந்து முத்துப்பாண்டி என்பவர், தனது வலது கால் துண்டான நிலையில் மிகவும் ஆபத்தான மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலையில் கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள பிம்ஸ் மருத்துமவனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார். கால் ஒடிந்த நிலையில், அவர் இருந்தார். கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய விரைவான சிகிச்சை அவருக்கு தேவைப்பட்டாலும், அதிக அளவில் ரத்தப்போக்கு இருந்தது. இதனால், மயக்க நிலையில் இருந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் மாரடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. ஃபிம்ஸ் மருத்துவனையின் டாக்டர் முருகதாஸ் உடனடியாக செயல்பட்டு, மாரடைப்புக்கான சிகிச்சையை மேற்கொண்டார். அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர் சந்தோஷ் சேகர் தலைமையினாலான குழு, ரத்தம் செலுத்தி அவரது காலை சரி செய்யும் முயற்சியில் இறங்கியது. சுமார் 6 மணி நேரம் சிகிச்சைக்கு பின், அவரது கால் சரி செய்யப்பட்டது. ரத்த ஓட்டம் துவங்க கால அவகாசம் தேவைப்பட்டது. 2, 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின், அவரது காலில் உணர்வுகள் வர தொடங்கியது. உடைந்த கால், சரி செய்யப்பட்டது. ஒரு சில வாரங்கள் சிகிச்சை பெற்ற பின், அவரது கால் செயல்பட துவங்கியுள்ளது. தற்போது அவர் எவ்வித உதவியும் இல்லாம நடக்க துவங்கியுள்ளார். என்று அவர் கூறினார்.