செல்வம் ஏஜென்ஸிஸ் நிறுவனர் துரைசாமிக் கவுண்டருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

மறைந்த செல்வம் ஏஜென்ஸிஸ் நிறுவனர் துரைசாமிக் கவுண்டருக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத் திறப்பு
விழாவும் கௌமார சபை வளாகத்தில் சிரவையாதீனம் ஆதி குரு முதல்வர் திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகளின் 63 ஆம் ஆண்டு குருபூஜை விழாவின் போது நடைபெற்றது.

கணபதியில் பிறந்த இவர், பல்வேறு திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தும், பொருளுதவி வழங்கியும், ஆன்மிகம் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கௌமார மடத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையவர். ஆன்மீக பணிகளோடு அறப்பணிகளிலும் தம்மை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டதோடு, சுற்று வட்டாரத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் அளவில் நிதியுதவி
வழங்கியுள்ளார்.


இவரது நினைவாக நினைவேந்தல் நிகழ்வும், படத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இவரது திருவுருவப்படம் அரிசியில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், தென்சேரிமலையாதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ். பி. அன்பரசன், எம். பி. நடராஜன், முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி, நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகாகோ சுப்பிரமணியம் மற்றும் இவரின் நண்பர்கள், உறவினர்கள் என கோவையின் முக்கிய நிறுவனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*