காசாகிராண்ட் சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் அபிநயா ரகுபதிக்கு நிதியுதவி

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக `ஆஸ்பைரிங் ஸ்டார்ஸ்’ என்னும் திட்டத்தை காசாகிராண்ட் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் அபிநயா ரகுபதி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். அவரின் எதிர்கால விளையாட்டு மேம்பாட்டிற்காக 2 லட்ச ரூபாய் நிதி உதவியை காசாகிராண்ட் வழங்கியது.

இந்த நிதியை அர்ஜுனா விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா மற்றும் காசாகிராண்ட் EVP – மார்க்கெட்டிங் ஈஸ்வர் ஆகியோர் வழங்கினர். இந்த நிதி அபிநயா ரகுபதியின் பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள், அவருக்கான ஊட்டச்சத்து மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு காசாகிராண்ட் `ஆஸ்பைரிங் ஸ்டார்ஸ்’ திட்டத்திற்காக நாடு முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இந்த விண்ணப்பங்கள் நடுவர் குழு மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டது.  அதில் கோவையைச் சேர்ந்த ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அபிநயா ரகுபதி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் காசாகிராண்ட் EVPமார்க்கெட்டிங் ஈஸ்வர் பேசுகையில், ரோலர் ஸ்கேட்டிங் வியைாட்டில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை புரிந்த அபிநயாவுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம். சர்வதேச அளவில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவராகவும் பல விருதுகளையும், வென்றவராகவும் அபிநயா உள்ளார். எங்களின் இந்த நிதி பங்களிப்பு வரவிருக்கும் போட்டிகளில் அவர் மேலும் சிறப்பாக செயல்பட உதவும் என்று நம்புகிறேன். இதேபோல் கோவையைச் சேர்ந்த பல்வேறு திறமைமிக்க விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதே எங்கள் நோக்கமாகும். அபிநயா எதிர்கால போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாட நான் வாழ்த்துகிறேன்  என்றார்.

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக `காசாகிராண்டு ஆஸ்பைரிங் ஸ்டார்ஸ்’ திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு காசாகிராண்ட் சென்னையில் துவக்கியது. கடந்த காலத்தில் டென்னிஸ் வீரர்கள், வில்வித்தை வீரர்கள், ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ரோலர் ஸ்கேட்டிங் போன்ற அதிக செலவுமிக்க விளையாட்டை தொடர இந்த நிதி தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அபிநயா ரகுபதி தெரிவித்தார். மேலும் இதில் நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.