கர்ப்பப்பைவாய் புற்றுநோய்  முகாம்

ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முகாம் நடைபெற்றது.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் என்பது ஆரம்பகால அறிகுறி இல்லாத ஒரு புற்றுநோய். இதனை PAP Smear பரிசோதனையில் மட்டுமே இதனை கண்டறிய முடியும். இதனை இந்த முகாமில் முற்றிலும் இலவசமாக பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை ஒழுக்கற்ற மாதவிடாய், மாதவிடாய் நின்றபின் உதிரப்போக்கு, துர்நாற்றம் அல்லது வெள்ளைப்படுதல் அதிகரித்தல், மாதவிடாய் இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து உதிரப்போக்கு, உடலுறவுக்கு பின் உதிரப்போக்கு இவைகள் இருந்தால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் இந்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.