இந்துஸ்தான் கலை கல்லூரியில் “ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்” நிகழ்ச்சி

அவினாசி சாலை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த முதல் நாள் நிகழ்ச்சியில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயளர் பிரியா சதிஸ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, நிர்வாக அதிகாரி சிவசங்கர் மற்றும் கல்லூரி பேராசிரிய, பேராசிரியைகள் உட்பட மொத்தம் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த முதல் நாள் காலை பகுதியில் நமது நம்பிக்கை இதழின் நிறுவனர் மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு “கரும்பலகை எனும் கல்வெட்டு” என்ற தலைப்பில் உரையாடினார். அடுத்த பகுதியில் அமெரிக்காவில் உள்ள போக்கஸ் எடுவேசனின் மூத்த மேலாளர் பிரசாந்த் பாட்டில் ரிசோர்ஸ் பர்சனாக கலந்துகொண்டு “கற்பித்தலில் ஐசிடி – யின்  பயனுள்ள பயன்கள்” என்ற தலைப்பில் உரையாடினார்.

இரண்டாவது நாள் காலை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் தலைவர் மற்றும் பேராசிரியருமான வனிதா “விளைவு அடிப்படையிலான கல்வி” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். அன்று மதியம் பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் எக்ஸ்சேவியர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜி.போர்ஜியா “வகுப்பறை மேலாண்மை” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இறுதிநாள் முதல் பகுதியில் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர், எம்.ஜி.சேதுராமன் “நேக் மதிப்பீட்ற்கான புதிய வடிவம்” என்ற தலைப்பில் நேக் குறித்தும் அதன் அந்தஸ்தைப் பெற ஒரு கல்லூரி என்னென்ன செய்யவேண்டும் என்பதை குறித்து விவரிக்கவுள்ளார். இதன் இரண்டாம் பகுதியில் பிஎஸ்ஜி கலை கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் ராஜேந்திரன் “ஆராய்ச்சி முறைகளில் கருவிகள்” என்ற தலைப்பிலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுகள் துறையை சேர்ந்த பேராசிரியர் காசிலிங்கம் “ஆராய்ச்சி முறை நுட்பம்” என்ற என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளார். மேலும் ஞாயிறு அன்று அனைத்து பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் அனைவரும் “அவுட்பாண்டு” என்று அழைக்கப்படும் வெளியில் செல்லுதல் என்ற நிகழ்விற்கான கொடைக்கானல் அழைத்துச் செல்லவுள்ளனர். இதன் மூலம் பேராசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். அவர்களது தேவை என்ன?  மாணவர்களின் குடும்ப சுழல் என்ன? அவர்களது படிப்பு மற்றும் தனித்திறமைகள் என்ன? அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பற்றியும் விவரிக்கவுள்ளனர்.