2020 ஆம் ஆண்டை பசுமையாக்க ‘விதை’ எனும் திட்டம்

சாலை மற்றும் போக்குவரத்து துறை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ‘விதை’ என்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோவையில் தொடங்கினர். 250 உறுப்பினர்கள் பங்கேற்று நெடுஞ்சாலைகள்  பசுமையாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சாலை மற்றும் போக்குவரத்துத் துறை பொறியியல் கல்லூரியின் பயின்றோர் சங்கம் 1988 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு ஐந்து ஆயிரத்திற்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

எல்ஜி கிளினிக் மருத்துவர் டாக்டர் பிஎஸ் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 2020 ஆம் ஆண்டை பசுமை பாதையில் செலுத்திடும் வகையில் விதை என்ற விழாவினை ஒருங்கிணைத்து தமிழகம் எங்கும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டு அதன் முதற்கட்டமாக புத்தாண்டன்று கோவை அவினாசி சாலை, தெக்கலூர் அருகே உள்ள  கணியூர் சுங்கச்சாவடி சுற்று வட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்கள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் உதவியுடன் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்  இம் பைகர் நிறுவனத்தின் நிர்வாகி ராமகிருஷ்ண மூர்த்தி, கணியூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜேஷ், போக்குவரத்து சாலை மற்றும் போக்குவரத்து துறை பொறியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கோவை நிர்வாகி ரவி உள்ளிட்ட 250 பேர் இதில் பங்கேற்றனர்.