கேஐடி கல்லூரியில் கராத்தே கருத்தரங்கு

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கேஐடி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில், “அட்வான்ஸ் கராத்தே குமிட்டி செமினார் -2019” கல்லூரி வளாகத்திலுள்ள கலையரங்கத்தில் இரண்டு நாட்கள்  நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த 82க்கும் அதிகமான பள்ளிகளிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா, பொதுச் செயலகம், ஷிஹான். அம்பேத்கர் குப்தா கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இவர் பேசுகையில், இளம் வயதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், சிறந்த கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தங்களது கலையை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறினார். கராத்தே போன்ற தற்காப்பு கலையை மாணவ, மாணவியர்கள் கற்றுகொள்வது அவசியம் எனவும், இதற்கு பெற்றோர்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், மாணவ, மாணவியர்கள் கராத்தே சார்ந்த வினாகளுக்கு கலந்துரையாடல் மூலம் விடையளித்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு கலையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுகள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத் தலைவர் சென்ஸெய்.எஸ்.சாய் ப்ருஸ், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கருத்தரங்கு அமைப்பாளர்- சென்ஸெய்.டி. அறிவழகன், கோயம்பத்தூர் ஏர்போர்ட் – உதவியாளர் கமாண்டன்ட் – பிரேம்,   பயிற்சியாளர். சென்ஸெய். விக்கி யாதவ், சென்ஸெய்.சுதிர், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுனர்.