தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வினைப் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா. அதேநேரத்தில் இந்தியா சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், அல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாக பந்துவீசி வருகிறார். சமிபகாலமாக அஷ்வினுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்திருந்த ஜடேஜா, ராஞ்சி டெஸ்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அஷ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். 7புள்ளிகள் குறைவாக பெற்று(862) அஷ்வின் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளர்.

பேட்டினங்கில் ஸ்மித் முதலிடத்திலும் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். விராட் கோலி 4-ஆம் இடத்தைத் தக்க வைத்துகொண்டுளுள்ளார்.

அல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் அஷ்வின் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜடேஜவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.