கோப்பையை பெற்றது குவாண்டம் குயின்ஸ் அணி

கேபிஆர் குழுமத்தின் மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் குழுவினருக்கு இடையேயான ஸ்ரீ பழனிசாமி கவுண்டர் – செல்லம்மாள் நினைவு கபடி போட்டி நடைபெற்றது.

மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் பெண்களுக்கான இந்த கபடி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கு பெற்றது. கிராம திருவிழா போல் கோலாகரமாக கொண்டாடப்பட்ட லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேபிஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து இவ்விழாவை துவங்கி வைத்தார்.

மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்ட இந்த கபடி போட்டியின் இறுதி போட்டியில் இதில் குவாண்டம் குயின்ஸ் மற்றும் சக்தி சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி கொண்டன. இந்த போட்டி வெறும் போட்டியாக மட்டுமல்லாமல் இரு அணிகளும் போரிட்டது. இந்த இறுதி போட்டியின் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் ஆட்டத்தின் கடைசி நிமிடம் போல மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

இறுதி போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சரி பாதி புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. ஆனால், அடுத்த பகுதி குவாண்டம் குயின்ஸ் அணியினர் திடீரென பற்றிய தீ போல் புள்ளிகள் பெற்று முன்னேறின. இருந்தாலும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று விடாப்பிடியாக போட்டி போட்டனர் சக்தி சூப்பர் கிங்ஸ் அணியினர். இருப்பினும் போட்டியில் வெற்றி என்பது ஒருவருக்கு தான் என்பதாலும், தங்களுக்கு ஒற்றுமையை வெளிக்காட்டியதாலும் குவாண்டம் குயின்ஸ் அணியினர் ஸ்ரீ பழனிசாமி கவுண்டர் – செல்லம்மாள் நினைவு கோப்பையை தூக்கி சென்றனர்.

இவ்விழாவில் கேபிஆர் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன், அவ‌ரது மனைவி காயத்ரி, அரசூர் மில்லின் துணை தலைவர் சோமசுந்தரம், கார்மெண்ட்ஸின் துணை தலைவர் தனபால் ஆகியோர் இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கும், மற்ற அணிகளுக்கும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்கள்.