பிணி போக்கும் ‘அட்சய பாத்திரம்’

கோவையின் YWCA பெண்கள் கூட்டமைப்பு தன்னார்வம் கொண்டு ஒன்றாக இணைந்து எஸ்பிஐ அனுக்கிரஹா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் நோயாளிகளின் பசி, பிணி போக்கும் “அட்சய பாத்திரமாக” உதவ முன் வந்தனர்.

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 350 மதிய உணவு பொட்டலங்களை YWCA குழுவினர் விநியோகித்தனர். இந்நிகழ்வில் டீன் அறக்கட்டளை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

மே, 2017 லில் அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ அனுக்கிரஹா (ஒருங்கிணைந்த ஊரக ஹாஸ்பிஸ் & பாலியேடிவ் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள்) தொடங்கின. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களின் குழுவினரால் நோய்த்தடுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிரமடைந்த குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் அன்பு மற்றும் ஆதரவு அளித்து வருகிறது.

காரமடை ஒன்றியத்தின் 17 பஞ்சாயத்துகளில் கடந்த 2 ஆண்டுகளாக டீன் அறக்கட்டளை நிறுவனர் தீபா முத்தையா அவர்களின் தலைமையில் 666 நோயாளிகளுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.