மோசமான சாலைகளும் ஒரு காரணம் தான்

– சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் விபத்துகள் என்பது தினமும் நடக்ககூடிய ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இந்த விபத்தில் சிக்குபவர்கள் பலர் தனது வாழ்கையை தொலைத்துள்ளனர். அவர்கள் காயங்கள், கை, கால் இழப்பு ஒரு சில சமயம் உயிரிழப்பு கூட நேரும்.

இத்தகைய உயிரிழப்பிற்கு தலைகவசம் அணியாமல் இருப்பது தான் காரணம் என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது.

ஆனால், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் சாலை விபத்திற்கு காரணம் தலைகவசம் அணியாமல் இருப்பது மட்டும் அல்ல. மோசமான சாலைகளும் ஒரு காரணம் என்று கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.