2020-ம் ஆண்டு, ஜூன் 1 முதல் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்

 

– மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

இந்தியா முழுவதும் விரைவில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், “2020-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார். இதன் மூலம் வேலைக்காக வெளியூர் செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், பணிநிமித்தமாக அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றும் ஊழியர்கள் என அதிகமானோர் பயன் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பின் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவு பொருட்களை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு கடையிலும் ஆதார் மூலம் அடையாள அட்டையும், பயோமெட்ரிக் முறையும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்துக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்” என தெரிவித்தார்.

Source : https://www.nakkheeran.in/24-by-7-news/india/one-nation-one-ration-card-scheme-be-started-june-2020