சிபாகாவால் சீரமைக்கப்பட்டது பாரம்பரிய பள்ளி

கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம் (சிபாகா). சோசியல் பேனலின் சமூக நல திட்டங்களில் மற்றுமொரு சிறப்பு நிகழ்வாக சோமனூர் கோம்பைக்காடு புதூர் கிராமத்தில் ஆர்சி  தொடக்கப்பள்ளியில் 125 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க பள்ளியின் கட்டிடத்தை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கும் விழா நடைபெற்றது.

தலைமை விருந்தினராக ப்ரோபெல் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆர்சி  தொடக்கப்பள்ளி நிர்வாகி பாதிரியார் ரோசாரியோ வினோத் வாழ்த்துரை வழங்கினார். 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கருணாநிதி, செயலாளர் சுவாமிநாதன், சோசியல் பேனல் செல்வராஜ், பொருளாளர் சகாயராஜ், தலைவர் தேர்வு பழனிச்சாமி, இத்திட்டத்திற்கான ஆலோசகர் சிவசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட 120 மாணவர்களுக்கு நமது பாரம்பரிய உணவான கடலைமிட்டாய் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.