நட்பு என்றும் புனிதமானது

கதை சொல்லி அமுதா கார்த்திக்

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் கண்மணியே கதை கேளு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் பிரபலமான கதை சொல்லி அமுதா கார்த்திக் குழந்தைகளுக்கு பல கதைகள் கூறினார்.

நம் நண்பர்களுடன் உள்ள நட்பை எந்த காரணங்களுக்காகவும் அவமதிக்ககூடாது. நண்பர்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் பார்க்கக் கூடாது. மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை அலிக்குப் பிடித்த பழைய ஷூ மற்றும்  நண்பர்கள் கதை மூலம் கூறினார்.

தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி மாலை அணிந்து ஐயப்பன் சாமியை வணங்கி வருகிறோம்.

குழந்தைகளுக்கு ஐயப்பனின் கதை மற்றும் மலை ஏறுவதின் முக்கியதுவம் குறித்தும் கதையாக கூறினார். மற்றும் ஓம் ஓம்  ஐயப்பா என்ற பாடலையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பாட வைத்தார்.

இன்றைய குழந்தைகள் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் பல உள்ளது. அந்தப் பாரம்பரிய விளையாட்டுக்களும் சொல்லிக் கொடுத்து இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். கொளை கொளையா முந்திரிக்கா  என்று குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 100 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பங்கேற்றனர்.