தமிழனின் மடத்தனம் தான் முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்கிறது

சுகி சிவம்

நாம் தாய் மொழியான தமிழ் மொழியின் அடையாளமாய் நமது கண் முன்னே தெரிவது அந்த முண்டாசு கட்டி முறுக்கு மீசை வைத்துக் கொண்டு தீ பொறி தெறிக்கும் கண்களுடன் காட்சி தருபவன் பாரதி. அந்த பாரதி போன்ற ஒரு வீரனை வரலாறு அவனுக்கு பிறகு இதுவரை கண்டதில்லை.
அப்படிபட்ட பாரதியின் கருத்துக்களை மையமாக கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பாரதி வழியில் தமிழர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாய் இருப்பது பழமை வாதமா? புதுமை மோகமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் பழமை வாதம் என்று இலக்கியச்சுடர் ராமலிங்கம், வழக்கறிஞர் சதிஷ்குமார் ஆகியோரும் புதுமை மோகம் என்று பேராசிரியர் ராஜாராம், ராம. சௌந்திரவள்ளி
ஆகியோரும் தங்களது கருத்துக்களை பாரதி பற்றி மிகவும் ஆழமாக உரையாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு அரங்கு நிறைய பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.