வட அமெரிக்காவின் முதுகு தண்டுவட ஆராய்ச்சி சமூகத்தின் விருது

கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட ஆராய்ச்சி குழு வட அமெரிக்காவின் முதுகு தண்டுவட ஆராய்ச்சி சமூகத்தின் 2019ம் ஆண்டின் ஆராய்ச்சிற்கான விருதை பெற்று சாதனை படைத்துள்ளது.

கங்கா மருத்துவமனை டாக்டர்  எஸ். ராஜசேகரன் தலைமையில் உள்ள முதுகு தண்டுவட ஆராய்ச்சி குழு சமீபத்தில் வட அமெரிக்காவின் முதுகு தண்டுவட ஆராய்ச்சி சமூகத்தின்  (North American Spine Society (NASS) “முதுகு தண்டுவட பாதுகாப்பின்” 2019ம் ஆண்டின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், அவர்களுடைய சர்வதேச பிரபல மருத்துவ இதழில் (The Spine Journal) முதன்முறையாக இந்திய ஆராய்ச்சியான கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சியை அங்கீகரித்து வட அமெரிக்காவின் முதுகு தண்டுவட ஆராய்ச்சி சமூகம் முதுகு தண்டுவட ஆராய்ச்சி கட்டுரையை சர்வதேச மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது.

இந்த விருதுடன் 10,000 அமெரிக்க டாலரையும் அன்மையில் நடைபெற்ற NASSன் வருடாந்திர ஆண்டு விழாவில் கங்கா மருத்துவமனை ஆராய்ச்சி குழுவிற்கு வழங்கி கௌரவப்படுத்தியது.

இது குறித்து கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜசேகரன் பேசுகையில், முதுகு வலி என்பது தற்போது மிகச்சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கிறது. மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினருக்கு வாழ்க்கை ஏதோ ஒரு தருணத்தில் விபத்து ஏற்படுகிறது.  இதில் 10 சதவிகிதத்தினர்  நிரந்தர ஊனமுற்றவர்களாகிறார்கள். இதற்கான காரணங்கள் முதுகு தண்டுவட பாதிப்புகள்தான். இந்த முதுகு தண்டுவட பாதிப்புகள் இளைஞர்களுக்கும் வருவதுதான் மிகவும் வருத்தமடைய செய்கின்றன.

இந்த ஆராய்ச்சியின் மூலம், முதுகு தண்டுவடத்தில் உள்ள ஜவ்வின் தேய்மானம் வயதுக்கு ஏற்ப மாறுவது பற்றியும், வட்டுக் குறைபாடால் ஏற்படும் முதுகுவலி குறித்தும் ஆராயப்பட்டது. முதுகு வலிக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான துணை நோய்த்தாக்கத்தையும் இக்குழு மூன்று வருடம் ஆராய்ந்து அறிந்துள்ளது.

கங்கா மருத்துவமனை ஆராய்ச்சி மையம் கங்கா எலும்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் அங்கீகரிக்கப்ட்டுள்ளது. பல வருடங்களாக இம்மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழுவானது முதுகுவலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் முதுகுவலி பெருமளவு பாதிக்கக்கூடிய நோயாகும். இதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, உலகில் பிரபலமான Eurospine World wide open Research Award, Asia Pacific Spine Society Awards and Britspine  Award முதலிய விருதுகளால் கங்கா ஆராய்ச்சி மையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகெங்கிலும் 200க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவ இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.