கொசினா சார்பில் ‘கல்வெட்டு சித்தர்’ விருது

கொசினாவின் சிறப்புக் கூட்டம் கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் தொழில்நுட்பம் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் வேலவன் மற்றும், சீனிவாசன் அசோசியேட்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர் ஜெகதீசன் ‘திராவிடர்களின் கலை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். இந்த விழாவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ராஜேந்திரனுக்கு ‘கல்வெட்டு சித்தர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வரவேற்புரை ஆற்றிய கொசினா தலைவர் சரவணன் பேசுகையில், அவருக்கு விருது வழங்குவது அவருக்கு கௌரவம் என்றும் வரும் காலத்தில் இப்படியான அறிஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும் இந்த விழாவில் பொறியாளர் களால் கட்டப்பட்ட தரமான வீடுகளின் விவரங்களை கொண்ட இன்ஜினியர்ஸ் பிராபர்டி பேங்க் என்ற வெப்சைட் துவக்கி வைக்கப்பட்டது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பொறியாளர்களால் கட்டப்பட்ட தரமான வீடுகளின் விபரங்கள் இந்த வெப்சைட்டில் இருக்கும். தரமான வீடு வேண்டும் என விரும்புவர்கள் இந்த வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கொசினா தலைவர் கூறினார்.
இந்தக் கூட்டம் துவங்கும் முன் ‘குடவரைக் கோவில்கள்’ என்ற தலைப்பில் இராஜேந்திரன் மற்றும் திராவிடர்களின் பழங்கால நீர் சேமிப்பு முறை பற்றி முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீதரன் பேசினார். கொசினா டிரஸ்ட் சேர்மன் குருவாயூரப்பன் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி உறுப்பினர்களுக்கு சில நல்ல கருத்துக்களையும் திட்டங்களையும் கூறினார். மேலும், கொசினா 2020யை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் விஜயகுமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஆழ்வார் பாபுஜி, துணைத்தலைவர் குருபிரசாத், இரண்டாம் துணைத் தலைவர் பிரபாகரன், உடனடி முன்னாள் தலைவர் மோகன்ராஜ், முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.