“கேபிஆர் ஃபிளையிங் பீ அவார்டு”

கேபிஆர் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் (Women Empowerment Cell) சார்பாக கோவை பாரதிபுரத்தைச் சேர்ந்த ராதிகாவின் சாதனையை பாராட்டி கேபிஆர் ஃபிளையிங் பீ அவார்டு” வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் துணைத்தலைவி திவ்யா (உதவி பேராசிரியை, மின்னியல் துறை) வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அகிலா விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் ராதிகா தன்னுடைய கடினமான பாதைகளை வெற்றிப்பாதைகளாக மாற்றி வாழ்ந்து வருகிறார். இவருக்கு இளம்வயதிலேயே எளிதில் உடையக்கூடிய எலும்பு நோய் உள்ளது. அதனால் அவரால் சாதாரணமாக செல்ல இயலாது. அதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் வீட்டிலிருந்தபடியே உயர்கல்வி கற்று வருவதுடன் பழைய தாள்களை கொண்டு பல்வேறு விதமான அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை தன்னம்பிக்கையோடு செய்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து வருகிறார். இதை பெரும் நிறுவனங்கள் ஆர்வமுடன் வாங்கி பரிசளித்து வருகின்றனர். இதற்கு இவரின் பெற்றோர் மற்றும் சகோதரன் உறுதுணையாக உள்ளார். மேலும் இவரது சகோதரர் ராஜ்மோகன் மற்றும் அவரது நண்பர்கள் ராதிகாவின் படைப்புகளை இணையவழி மூலமாக விற்பனை செய்வதற்கு உதவி புரிகின்றனர். சகோதரர் ராஜ்மோகன் கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் முன்னால் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நிறைவில் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவி ஜானகி (பேராசிரியை, கணிதத்துறை) நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.