‘கற்றல் கற்பித்தல்’ பயிற்சி

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மிண்ணனுவியல் துறை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு நிதியுதவியுடன் உயர்கல்வி கற்பவர்களுக்கான  கற்றல் கற்பித்தலில் புதுமையான யுத்திகள் என்ற தலைப்பில் ஒரு வார ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை தலைவர் குமார் சின்னையன் வரவேற்புரையாற்றினார். இவரை தொடர்ந்து இதன் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் அகிலா சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், கற்றல் கற்பித்தலில் தற்போது புதிய மற்றும் புதுமையான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறித்தினார்.

இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கற்றல் கற்பித்தல் மையத்தின் திட்ட அலுவலர் ரிச்சா வர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் பேசுகையில் புதுமையான கற்றல் கற்பித்தல் அணுகுமுறை, வழிமுறைகள் மற்றும் இணைந்து கற்றல் ஆகிய தலைப்புகளில் பேசினார். துறையின் பேராசிரியை கற்பகம் நன்றி கூறினார். மேலும், இதில் செயல் வழி கற்றல் கற்பித்தலின் நோக்கம் ஆகிய தலைப்புகளில் சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து இத்துறை வல்லுநர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள். இதில் கே.பி.ஆர்.கல்லூயின் பேராசிரியர்கள் உள்பட தமிழகத்தை சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.